FAIRMED நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 31.12.2025 ம் திகதி வத்திராயன், குடத்தனை கிராம அலுவலர் பிரிவில் குழுவாக செயற்படும் பெண்கள் குழுக்களிற்கு அவர்களின் உற்பத்தி மேம்பாட்டிற்குரிய இரண்டாம் கட்ட உதவிப்பொருட்கள் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்ட போதான பதிவுகள்....

எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நலன்விரும்பி ஒருவரின் ரூ.20 000 நிதி பங்களிப்பில் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு இடர்பட்டு கொண்டிருக்கின்ற 15 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் 23.12.2025 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாகவும், வாழ்வை நேசிப்போம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.


வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (02.01.2026) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்றது.வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (02.01.2026) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலை, எதிர்வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், மேலும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.பல்வேறு அரச, தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு துறைசார் கருத்துகளை முன்வைத்ததுடன், ஒருங்கிணைந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


இன்றய தினம் 5/01/2025 மருதங்கேணி கலாசார மத்திய நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழல் உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் விவசாய உத்தியோகத்தர் மற்றும் கலாசார மத்திய நிலைய உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களினால் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டது.


2026 ஆம் ஆண்டிற்கான புதுவருடமானது பொறுப்பும் நம்பிக்கையும் சேரும் இனிய தொடக்கமாக எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரினால் கொடியேற்றப்பட்டு "வளமான நாடு அழகான வாழ்க்கை ஊடாக சவால்களின் முன்னிலையில் தயங்கமாட்டோம்" எனும் தொனிப்பொருளில் சத்தியப்பிரமாண நிகழ்வுடன் இனிதே ஆரம்பமானது.அத்துடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துரைகளும், உத்தியோகத்தர்களிற்கான நாட்குறிப்பு பதிவேடும் வழங்கிவைக்கப்பட்டது. இதில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.















