வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி-2026
*****************************************************
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையப் பிரதேச மட்டக் கண்காட்சி, 03.03.2026 செவ்வாய் கிழமை காலை 10.00மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் தலைமையில் ஆழியவளை மகளிர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இன்று (27/02/2026) பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கியூபெடிக்கா நிறுவனம் மற்றும் கடற்கரை சங்கங்களின் அனுசரணையுடன்   காலை 8 மணி அளவில் கடற்கரையோர சிரமதான நிகழ்வு மணற்காடு, பொற்பதி, நாகர் கோவில் (கிழக்கு, மேற்கு ), செம்பியன்பற்று வடக்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு பிரிவுகளில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், சமூகமட்ட அமைப்புக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2026 02 27 at 10.20.32 AM WhatsApp Image 2026 02 27 at 10.20.33 AM 2 WhatsApp Image 2026 02 27 at 10.20.46 AM 1 WhatsApp Image 2026 02 27 at 10.21.02 AM Slide1 Slide2

 

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடாத்தும் நடமாடும்  சேவை

இன்று 11 .02 .2026 புதன்கிழமை  காலை 9 மணி முதல்  பிற்பகல் 2 மணிவரை வடமராட்சி கிழக்கு பிரதேச  செயலக  பிரிவுக்குட்பட்ட மக்களின் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின்  சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நடமாடும்  சேவைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும்  சேவையில்

வாகன அனுமதி பத்திரம் வழங்கல்,

வாகன உடைமை மாற்ற சேவைகள்

 நீண்ட காலமாக உரிமை மாற்றல் செய்யப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்

மற்றும் வாகன பரிசோதகர் அன்றையதினம் வருகை தர இருப்பதனால் , நீண்ட காலமாக வாகனங்களிற்குரிய வாகன பரிசோதனை அறிக்கையினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவர்கள் உரிய  ஆவணங்களை சமர்ப்பித்து அறிக்கையை பெற்றுக் கொள்ளமுடியும் .

வாகன புகை பரிசோதனையும்  அன்றைய தினத்தில் இடம்பெற உள்ளது .  

அத்துடன் இணையவழி  வாகன அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள்  போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே மேற்படி  சேவைகளை பெறவிரும்பும் பொதுமக்கள் இன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு  உரிய ஆவணங்களுடன் வருகை தந்து  சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை.
நேற்றைய தினம் 11 .02 .2026 புதன்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது . குறித்த நடமாடும் சேவையில்
வாகன அனுமதி பத்திரம் வழங்கல்,
வாகன உடைமை மாற்ற சேவைகள்
நீண்ட காலமாக உரிமை மாற்றல் செய்யப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
மற்றும் வாகன புகை பரிசோதனை போன்ற சேவைகள் இடம்பெற்றது.
அத்துடன் இணையவழி வாகன அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம்பெற்றது.
   IMG 9922  IMG 9925  IMG 9931  IMG 9933 
 
 IMG 9934  IMG 9939  IMG 9949  IMG 9960
 
IMG 9949  WhatsApp Image 2026 02 11 at 2.11.32 PM  WhatsApp Image 2026 02 11 at 2.11.35 PM  WhatsApp Image 2026 02 11 at 3.12.33 PM
 
 

07.02.2026 அன்று எமது பிரதேச செயலகத்தின் பிரியாவிடை மற்றும் ஆண்டிறுதி விழா கலாசார மத்திய நிலையத்தில் இனிதே இடம்பெற்றது.

முதலில் பிரியாவிடை நாயகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 
பிரியாவிடை பெறும் உத்தியோகத்தர்களின் சேவையை நினைவுகூரும் காணொளி திரையிடப்பட்டது. மற்றும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள், மதிய போசனம் மற்றும் மகிழ்ச்சியான விளையாட்டுகள் மூலம் நாள் இனிதே நிறைவு பெற்றது.
IMG 9600   IMG 9610  IMG 9620    IMG 9633 
 
  IMG 9641   IMG 9655  IMG 9660    IMG 9667 
 
  IMG 9680   IMG 9686   IMG 9716  IMG 9717   
 
IMG 9723   IMG 9739     IMG 9753   IMG 9774  
 
IMG 9784  IMG 9787  IMG 9823  IMG 9865  
 
IMG 9887  IMG 9906
IMG 9653  IMG 9673  IMG 9662
 
 
 
 
Scroll To Top