வருடாந்த பொங்கல் நிகழ்வானது இன்றைய தினம் 2026/01/19 ம் திகதி எமது பிரதேச செயலகத்தில் சிறப்புற இடம்பெற்றது. பதிவுகள் .....

நேற்றையதினம் (13.01.2026 ) CFCD நிறுவனத்தினருடைய அனுசரணையில் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு மாதாந்த உதவிப்பணமும், கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கும் நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், CFCD நிறுவன உத்தியோகத்தர்,சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

01.01.2026 ஆம் திகதி அன்று, வடக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூக்குக்கண்ணாடிகள், பயனாளிகளிற்கு பிரதேச செயலாளர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.


2026ம் ஆண்டிற்குரிய அம்பன் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வருடாந்த பொதுக்கூட்டமானது, கடந்த வெள்ளிக்கிழமை 09.01.2026 அன்று நடைபெற்றது.
















