வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவின் குடத்தனை பதிவாளர் பிரிவிற்குரிய பிறப்பு இறப்பு பதிவாளர் மற்றும் வடமராட்சி பிரிவுக்கான விவாக பதிவாளர் பதவிக்கான விண்ணப்பம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது

இடமாற்றம் பெற்றுச்செல்லும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பொன்னையா சுரேஸ்குமார் அவர்களின் பிரிவுபசார விழா நேற்றைய தினம் 2026.04.29 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்


சேதன விவசாய மற்றும் தரச்சான்றிதழ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு. !
திகதி :-07.05.2026
நேரம்:- 8.30 am-05.00 pm
இடம் :-மாவட்ட செயலக கேட்போர்கூடம், யாழ்ப்பாணம்.
பதிவுகளுக்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திசபை வடமாகாண காரியாலயத்தை தொடர்புகொள்ளுங்கள் 021 221 5944
அல்லது
இந்த link ஐ click செய்யுங்கள்
https://forms.gle/izgKCbAjEgz79Ac38
Strictly for first come first serve basis

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் நடாத்தப்படும் இவ்வருட மகளிர் தின விழா 29.04.2926 ம் திகதி வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் செல்வி தர்சினி உருத்திரகோடீஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி நிரூபா நரேந்திரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி றியோபிலா லக்சன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக பெண்கள் வாழ்வுரிமைச் சங்க இணைப்பாளர் திருமதி வாசுகி வல்லிபுரம், FRIENDS நிறுவன இணைப்பாளர் திருமதி கார்த்திகேசு இராஜேஸ்வரி மற்றும் யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கிரிதரன் தயாபரி அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பெண்கள் செயற்பாட்டுக் குழுக்களின் கலை நிகழ்வுகளும் பெண் சாதனையாளர் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் கௌரவிப்பும் பெண் தொழில் முயற்சியாளர் அனுபவப் பகிர்வும், மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை நிகழ்வும் வாழ்வாதார உதவித் திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.















