இன்று (27/02/2026) பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கியூபெடிக்கா நிறுவனம் மற்றும் கடற்கரை சங்கங்களின் அனுசரணையுடன் காலை 8 மணி அளவில் கடற்கரையோர சிரமதான நிகழ்வு மணற்காடு, பொற்பதி, நாகர் கோவில் (கிழக்கு, மேற்கு ), செம்பியன்பற்று வடக்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, முள்ளியான், போக்கறுப்பு பிரிவுகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், சமூகமட்ட அமைப்புக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.













