23.06.2026 நேற்றைய தினம் யா/உடுத்துறை மகாவித்தியாலய மாணவர்களுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கருத்தரங்கானது போதைத்தடுப்பு உத்தியோகத்தர் மற்றும் கலாச்சார அபிவித்தி உத்தியோகத்தரால் நடாத்தப்பட்டது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக 03.09.2025 ம் திகதி தொடக்கம் 22.06.2026 ம் திகதி வரை கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு மாற்றலாகி செல்லும் திருமதி.சு.உஷா அவர்களிற்கான பாராட்டுதல் மற்றும் பிரியாவிடை நிகழ்வானது நேற்றைய தினம் 2026.06.22 அன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்களிநாலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலக அலுவலர்களுடன் இணைந்து புதிதாக எமது பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.F.C.சத்தியசோதி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.F.C.சத்தியசோதி அவர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் 2026.06.23 அன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் இலங்கை நிர்வாக சேவையின் தரம் I உத்தியோகத்தராவதுடன் தற்பொழுது சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றுவதுடன் எமது பிரதேச செயலகத்திற்கு பதில் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி பரமசிவன் கதிரேசன் ஆலயத்தின் 03ஆம் நாள் திருவிழா, வருடந்தோறும் எமது பிரதேச செயலகத்தினால் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றது. இவ்வருடத்திற்கான குறித்த திருவிழா இன்றைய தினம் (2026.06.22) ஆம் திகதி திங்கட்கிழமை அனைத்து உத்தியோகத்தர்களினதும் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.


















