“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு – வடமராட்சி கிழக்கு
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், “தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி” என்னும் கருப்பொருளில், “அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்” எனும் இலக்கை நோக்கி சமூகப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 2026.08.08 அன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆழியளை – கொடுக்குளாய் கடற்கரையோரப் பகுதியில் முற்பகல் 9.00 மணிக்கு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக, மக்கள் பங்கேற்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொது இடங்களின் தூய்மையையும் உறுதிப்படுத்துவதுடன், சமூகப் பொறுப்புணர்வையும் மக்கள் பங்களிப்பையும் வலுப்படுத்துவதாகும்.
இதன் ஒரு பகுதியாக, ஆழியளை – கொடுக்குளாய் கடற்கரையோரப் பகுதியில் மக்கள் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, கடற்கரை யோரப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. அரச உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்பணிகளில் பங்கேற்றனர்.
அத்துடன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் இன்றைய தினம் “அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைத்து கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
“மக்களுடன் இணைந்து – தூய்மையான தேசம்” என்ற நோக்குடன், மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியான சமூகப் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் தூய்மையானதும் அழகானதுமான நாட்டை உருவாக்குவதில் அனைவரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**“நமது கிராமம் – நமது பொறுப்பு
நமது பங்களிப்பு – தூய்மையான தேசம்”**

45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவை முன்னிட்டு பிரதேச மட்ட தொடர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன...!
National Youth Services Council-NYSC
இலங்கையின் இளைஞர்களிடம் உள்ள கலை, இலக்கிய, படைப்பாற்றல் மற்றும் புதுமைத்திறன்களை தேசிய மட்டத்தில் அடையாளம் கண்டு கௌரவிப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டிற்கான போட்டிகளில், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள திறமையான இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெறுவதற்கான சிறப்பான வாய்ப்பாக இது அமைகிறது. இப்போட்டிகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பங்கேற்கலாம்.
இம்முறை போட்டித் தொடர்களில் பின்வரும் பிரிவுகள் இடம்பெறுகின்றன:
"Melody" – இசைப் போட்டி
"Steps" – நடனப் போட்டி
"Young Voices" – பேச்சு மற்றும் அறிவிப்பாளர் (Anchoring/Presentation) போட்டி
"NovaMind" – செயற்கை நுண்ணறிவு (AI) படைப்புப் போட்டி
"Inkspire" – இலக்கியப் போட்டி
"Shutter Stories" – புகைப்படப் போட்டி
"Dream Canvas" – ஓவியப் போட்டி
"Beyond Limits" – மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான சிறப்பு போட்டி
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் 2026.08.10 ஆம் திகதிக்குள் nysc.lk/youthawards இணையதளத்தில் நுழைந்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பதிவு நிறைவடைந்த பின்னர் கிடைக்கும் பதிவு உறுதிப்படுத்தல் படிவத்தை போட்டி நடைபெறும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும். படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய போட்டிப் பிரிவுகளுக்கான படைப்புகள், அந்தப் பதிவு படிவத்துடன் சேர்த்து 2026 செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மகரகம தலைமை அலுவலகத்தின் கலைத்திறன் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட வேண்டும்.
போட்டி கால அட்டவணை
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம் – 2026.07. 20 முதல் 2026. 08. 30 வரை
பிரதேச மட்டப் போட்டிகள் – 2026 ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 30 வரை
மாவட்ட மட்டப் போட்டிகள் – 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30 வரை
படைப்புகள் சமர்ப்பிக்கும் இறுதி நாள் – 2026 செப்டம்பர் 10
தேசிய மட்டப் போட்டிகள் – 2026 அக்டோபர் 01 முதல் நவம்பர் 30 வரை
தேசிய மட்டத்தில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு 45ஆவது தேசிய இளைஞர் விருதுவிழாவில் தேசிய விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டின் தேசிய இளைஞர் விருதுவிழாவில் பல முக்கிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி, முதன்முறையாக 25 மாவட்ட இளைஞர் விருதுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பிராந்திய, மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்காக திறமையாளர் குழு (Talent Pool) அடிப்படையிலான பயிற்சி நிகழ்ச்சிகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும் தகவல்களுக்கும்
ஆன்லைன் விண்ணப்பங்களுக்கும்:
Clean Sri Lanka' வேலைத்திட்டத்தின் உயரிய இலக்கை அடைவதற்காக முன்பள்ளி குழந்தைகளிடம் விதைக்கப்படும் 'கழிவு மேலாண்மை' பற்றிய விழிப்புணர்வானது
"நாளைய இலங்கையை மாசற்ற பசுமையான நாடாக மாற்றும்"
எனும் அடிப்படையில் 2026.08.05ந் திகதி
J/418 கிராம அலுவலர் பிரிவின் சென்அன்ரனீஸ் முன்பள்ளியில் திண்மக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிகழ்ச்சித்திட்டமானது ECDO & DO (environment) ஆல் இணைந்து நடாத்தப்பட்டது.
வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட குப்பைத் தொட்டிகளை வழங்கி விளையாட்டினூடாக கழிவுகளை பிரித்து போட கற்றுக் கொடுக்கப்பட்டதுடன்
சிறார்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளும் வகையில் அட்டைப்படங்கள் வழங்கப்பட்டு அதனூடாக 3R தத்துவம் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.

2026.08.07 முதியோர்களுக்கான இலவச சித்த மருத்துவ முகாம் குடத்தனை நற்தூது பணியக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது நடக்க முடியாத நோயாளர்களை அவர்களுடைய இல்லங்களிற்கு வைத்தியர்கள் சென்று பார்வையிட்டு சிகிச்சை அளித்ததுடன் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போதான பதிவுக ள்

-World Breast feeding Week 2026-
(Aug 1- Aug 7 வரை)
உலக தாய்ப்பாலூட்டல் வாரத்தின் இறுதி நாள் (07.08.2026) ECDO, PHM அவர்களால் J/433 (முள்ளியான்) கிராம அலுவலர் பிரிவில் 'தாய்ப்பாலின் நன்மைகள் மற்றும் தாய்ப்பாலூட்டுவதற்குக் குடும்பமும் சமூகமும் அளிக்க வேண்டிய ஆதரவை' வலியுறுத்தி கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எமது வேண்டுகோளை ஏற்று இவ்விழிப்புணர்வினை மேலும் சிறப்பிக்கும் வகையில் 40பேருக்கான இலைக்கஞ்சியினை தயாரித்து உபசரணை வழங்கிய கட்டைக்காடு WRDS க்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

















