මුල් පිටුව
வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை - 11 .02 .2026

வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை
வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை
இன்று 11 .02 .2026 புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடமாடும் சேவையில்
வாகன அனுமதி பத்திரம் வழங்கல்,
வாகன உடைமை மாற்ற சேவைகள்
நீண்ட காலமாக உரிமை மாற்றல் செய்யப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்
மற்றும் வாகன பரிசோதகர் அன்றையதினம் வருகை தர இருப்பதனால் , நீண்ட காலமாக வாகனங்களிற்குரிய வாகன பரிசோதனை அறிக்கையினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அறிக்கையை பெற்றுக் கொள்ளமுடியும் .
வாகன புகை பரிசோதனையும் அன்றைய தினத்தில் இடம்பெற உள்ளது .
அத்துடன் இணையவழி வாகன அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே மேற்படி சேவைகளை பெறவிரும்பும் பொதுமக்கள் இன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உரிய ஆவணங்களுடன் வருகை தந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரியாவிடை மற்றும் ஆண்டிறுதி விழா - 07.02.2026
07.02.2026 அன்று எமது பிரதேச செயலகத்தின் பிரியாவிடை மற்றும் ஆண்டிறுதி விழா கலாசார மத்திய நிலையத்தில் இனிதே இடம்பெற்றது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியாளர்கள் சந்தை 2026.01.30


තවත් කියවන්න: உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியாளர்கள் சந்தை 2026.01.30















