முகப்பு
மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது
எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நலன்விரும்பி ஒருவரின் ரூ.20 000 நிதி பங்களிப்பில் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு இடர்பட்டு கொண்டிருக்கின்ற 15 மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் 23.12.2025 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டதுடன் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாகவும், வாழ்வை நேசிப்போம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.


FAIRMED நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் உதவி
FAIRMED நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த 31.12.2025 ம் திகதி வத்திராயன், குடத்தனை கிராம அலுவலர் பிரிவில் குழுவாக செயற்படும் பெண்கள் குழுக்களிற்கு அவர்களின் உற்பத்தி மேம்பாட்டிற்குரிய இரண்டாம் கட்ட உதவிப்பொருட்கள் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்ட போதான பதிவுகள்....

கற்றல் உபகரணப்பொதி வழங்கப்பட்டது
இன்றைய தினம் (05.01.2026) கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு பொருளாதார ரீதியாக இடர்பட்டு கொண்டிருக்கின்ற குடும்பத்திற்கு கற்றல் உபகரணப்பொதி மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

மூக்குக்கண்ணாடிகள் வழங்கல்
01.01.2026 ஆம் திகதி அன்று, வடக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூக்குக்கண்ணாடிகள், பயனாளிகளிற்கு பிரதேச செயலாளர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

















