முகப்பு
தேசிய நேர்மை வாரம் - நிகழ்ச்சித் தொகுப்பு
தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு
'நேர்மை மிக்க வருங்கால தலைவர்களை கொண்ட சந்ததியொன்றினை கட்டியெழுப்பும் நோக்கில் '
நேற்றைய தினம் (2026.07.31) எமது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களின் சிறப்பான ஒழுங்குபடுத்தில் ஆழியவளை J/431 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த கலைவாணி முன்பள்ளியில் உதவிப் பிரதேச செயலர், ECDO, முன்பள்ளி இணைப்பாளர், பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் பதிவுகள்


தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு 2026.07.31 அன்று "நேர்மை கலாசாரம் தூய்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளில் செம்பியன்பற்று அண்ணமார் அறநெறிப்பாடசாலையில் எமது மருதங்கேணி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நேர்மையான சிந்தனைகள் தொடர்பான சிறப்புரையினை சைவப்புலவர் சிவஸ்ரீ சுமுகலிங்கம் ஐயா அவர்களும் நிகழ்த்தியிருந்தார். அத்துடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பினை வழங்கிய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்,அண்ணமார் ஆலய நிர்வாகம், அறநெறி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் விசேடமாக தேநீர் உபசரணை வழங்கிய செம்பியன்பற்று தெற்கு பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்


'நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்திட்டத்தில் பிரதேச செயலக சிறுவர் பிரிவும், சமுர்த்தி பிரிவும் இணைந்து, நேற்றைய தினம் (31.07.2026) J/419 குடத்தனை கிராம அலுவலர் பிரிவில் வலிக்கண்டி கிராமத்தில் 'வெண்மதி' சிறுவர் கழக சிறுவர்களிற்கு சிறுவர்களிடையே நேர்மையை வலியுறுத்தும் வகையில் "நேர்மையான சமூகத்தை உருவாக்குவோம்" எனும் கருப்பொருளில் தெளிவூட்டல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மேலும், 1.சிறுவர் கழக நூலக விரிவாக்கம் மற்றும் வாசிப்பதன் நோக்கம்,அலைபேசியின் நன்மை,தீமை தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு, 2. மனதை ஒருநிலைப்படுத்தும் விளையாட்டு நிகழ்வு என்பன மிக சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு
இன்றைய தினம்( 31.07.2026 ) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் மருதங்கேணி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவும் இணைந்து நடாத்திய 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கின் பதிவுகள்......


பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டம்
நேற்றைய தினம் 22.07.2026 ம் திகதி பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்,
பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, பஸ் போக்குவரத்து பிரச்சினை, சமூக பணிக்குழு களவிஜயம், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.



















