பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்திற்கான செயற்குழுவிற்கானபயிற்சி பட்டறை பிரதேச செயலாளரின் தலைமையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளரால் 31.12.2025 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

25.12.311   25.12.312   25.12.313

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழா 2025 ற்கான மேலதிக கலைஞர் தெரிவுக்கான விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளன.கீழ் வரும் விருதுகளிற்கு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும். 
 
1. கலை மருது விருது - 2025 (40 - 59 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கானது)
 
2. கலைக்கதிர் இளம்கலைஞர் விருது - 2025 (18 - 39 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கானது)
 
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலைச் சேவையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இம் மாதம் 07 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
பிரதேச கலாசார பேரவை, 
வடமராட்சி கிழக்கு.
 

கோரோனர 3 ம் தடுப்பூசியினை (Booster) பின்வரும் இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். 30 வயதும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்.

268256266 272564694903179 3760778301681823077 n

viber image 2022 01 27 12 25 05 288

 

நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவை.

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை  யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில்  பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு.

1. நீதியமைச்சின் தொழிலாளர் தீர்ப்பாயம், சமாதான நீதவான், தீடீர்மரண விசாரணை, சத்தியப்பிரமாணத்திற்கான ஆணையாளர், அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்
👉தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள்
    
2.காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம்
👉காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும்.
👉காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன்இ காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்

3.சட்ட உதவி ஆணைக்குழு
👉நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.
👉ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.

4.இழப்பீட்டுக்கான அலுவலகம்
👉புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்;ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள்இ அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்  மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்

👉சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள்  தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.

5.தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்
👉இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

6. குற்றம் மற்றும் சாட்சியங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை
👉குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப்  பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன்  அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
👉இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

7. ஆட்பதிவுத்திணைக்களம்
👉புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும.;
👉ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.
👉அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

8. பதிவாளர் நாயகத்திணைக்களம்
👉காலம்கடந்த பிறப்புஇ இறப்புஇ திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து  சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான  மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்

9. சமூக சீர்திருத்த அலுவலகம்
👉சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

10. மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்
👉அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.
👉அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

11. மத்தியஸ்தர் சபை
👉மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)
👉ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.

12. சிறைச்சாலைத்திணைக்களம்
👉சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
👉சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்.
👉கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்

13. சிறு தொழில் முயற்சி அபிவருத்திப்பிரிவு
👉சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும்.

14. தொழில் பயிற்சி அதிகாரசபை
👉தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்.

மேலும், கடன் இணைக்க சபைத்திணைக்களம், பனை அபிவிருத்தி சபை, புனர்வாழ்வு ஆணையாளார் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும்  சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

District Media Unit Jaffna

தேசிய உற்பத்தி திறன் விருது - 2020 போட்டியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பெற்று கொண்டுள்ளது.
திறன் அபிவிருத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான அரச அலுவலகஙகளுக்கு இடையே நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் எமது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியாக பகிந்து கொள்கிறோம்.
இந்த விருதிற்கு சிறப்பாக வழிகாட்டிய மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்களுக்கும் கடினமாக உழைத்த ஏனைய பதவிநிலை மற்றும் சகல உத்தியோகத்தர்களுக்கும் இந்நேரத்தில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த விருதினை முன்னேற்றப்படியாக கொண்டு மேலும் சிறப்பாக எமது அலுவலகத்தை வினைத்திறன் மிக்க மக்கள் சேவை அலுவலமாக இயக்கி மக்களுக்கான பணியினை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்வோம். இன்னும் முன்னோக்கி செல்வோம்.
 
267111173 270660415093607 3504901655124686214 n
Scroll To Top