போதைப் பழக்கத்தை ஒழிப்போம் இலக்குடைய சமூகமாய் மாறுவோம் எனும் கருப்பொருளில் இன்றைய தினம் 2026.08 .07 வடமாகண விளையாட்டு திணைக்களத்தின் நிதி மற்றும் வழிகாட்டலில்  வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் விளையாட்டு பிரிவு மற்றும் போதை தடுப்பு பிரிவு என்போரினால் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதியோட்டம் இடம்பெற்றது. இதில் ஆண்களுக்கான போட்டியானது கட்டைக்காடு சந்தி முதல் பிரதேச செயலகம் வரையும் பெண்களுக்கான போட்டியானது ஆழியவளை  சந்தி முதல் பிரதேச செயலக நுழைவாயில் வரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வானது  கட்டைக்காடு அருட்தந்தை s.வசந்தன் மற்றும் பிரதேச செயலாளரினால் இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் நிறைவில் போதைப்பொருள் பாவனை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு உரை செம்பியன்பற்று அருட்தந்தை ஜஸ்ரின் ஆதர் என்பவரால் ஆற்றப்பட்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இம்முழு நிகழ்வின் போதிலும் மருதங்கணி போலிஸ் நிலையத்தினர் முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியதோடு மருதங்கணி ஆதார வைத்தியசாலையின் ஆம்புலன்ஸ் சேவையும் தொடக்கம் முதல் இறுதி வரை இணைந்து செயற்பட்டது

WhatsApp Image 2026 08 07 at 10.35.05 AM 2 WhatsApp Image 2026 08 07 at 10.35.09 AM 1 WhatsApp Image 2026 08 07 at 10.33.51 AM

குடியுரிமை சாசனம்

Scroll To Top