இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடாத்தப்பட்ட தெய்வீக கிராம நிகழ்வானது 04.09.2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இருந்து ஆன்மீக விழுமியம் சார்ந்த ஊர்வல பவனியோடு ஆரம்பமாகி மருதங்கேணி பரமசிவன் கதிரேசன் ஆலயத்தில் இறை வழிபாடு மற்றும் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள், உடுத்துறை முதியோர் சங்க உறுப்பினர்களின் வில்லிசை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த இந்துமத பீடத்தை சேர்ந்த சிவாகம கலாநிதி சிவஸ்ரீ வைத்தீஸ்வர குருக்கள் அவர்களின் ஆசியுரையும் சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழ் ஆசிரியர் கவிஞர் முல்லைதீபன் அவர்களின் "அறநெறியின் அவசியம்" எனும் தொனிப்பொருளில் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.
அந்த வகையில் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , ஆலய நிர்வாகத்தினர்கள், அறநெறி மாணவர்கள் ,ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
















