உலக சிறுவர் தினத்துடன் இணைந்து இந்த ஆண்டு செப்டெம்பர் 25ம் திகதி முதல் அக்டோபர் 1ந் திகதி வரை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இறுதி நாளாகிய இன்றைய தினம் 2026.10.01ந் திகதி 2026ம் ஆண்டிற்கான தொனிப்பொருளான 'திடமான உள்ளங்கள் வளமான சிறுவர்கள்' என்ற அடிப்படையில் முன்பள்ளி சிறுவர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம் இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் 80முன்பள்ளிச்சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.
'எனது மகிழ்ச்சியான முகம்', 'நான் பெறுமதியானவன்', 'நாம் நண்பர்கள்' எனும் கருப்பொருளில் சிறார்களை உட்படுத்தி ஆக்க கலைகள் மற்றும் புத்தாக்க செயற்பாடுகள் இடம்பெற்ற போதான பதிவுகள்


















