வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி-2026
*****************************************************
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் எமது பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையப் பிரதேச மட்டக் கண்காட்சி, 03.03.2026 செவ்வாய் கிழமை காலை 10.00மணியளவில் பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் தலைமையில் ஆழியவளை மகளிர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மதிப்பிற்குரிய வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்தீபன்அவர்களும் சிறப்பு விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ராசுதாகர் அவர்களும் கௌரவ விருந்தினராக கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சுமதி சிவகுமார் அவர்களும் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
கண்காட்சியிலே மணப்பெண் அலங்காரம், கேக் ஜசிங், பின்னல் ஆக்கம், கைவேலை, ஆரிவேக், Painting, Patch work, Cross stitch, Cookery, ஆடை வடிவமைத்தல் மற்றும் றிபன் வேக் எனப் பல வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பிரதேசமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


















