இன்று (2020.10.07) எமது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச மட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், சுகாதார வைத்திய அதிகாரி, மருதங்கேணி வைத்தியசாலை வைத்திய அதிகாரி, கடற்படை அதிகாரிகள், இராணுவ. அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கோட்டக்கல்வி அதிகாரியின் பிரதிநிதி, கடற்தொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தின் பொது முகாமையாளர், ப.நோ.கூ.சங்க பொது முகாமையாளர், எமது செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர். இதில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலமை மற்றும் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலிற்கு அமைய இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகவும் எமது பிரிவு கடற்கரையினை அண்மித்து உள்ள காரணத்தினால் இவ் விடயத்தில் கூடிய கவனம் எடுக்கப்படல் வேண்டும் எனவும் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் நடைமுறைகளை மறு அறிவித்தல் வரை பின்பற்ற வேண்டும் எனவும் கோரினார்.
01-முகக் கவசம் அணிதல், சமூக
இடைவெளியை பேணுதல், அடிக்கடி
கைகளைக் கழுவுதல் போன்ற
அடிப்படை சுகாதார விதிகளை
அனைத்து இடங்களிலும்
பின்பற்றுதல்.
02-பொதுப் போக்குவரத்தில்
இருக்கைகளுக்கு அளவான
பயணிகளுடன் மாத்திரம் பயணித்தல்
03-தனியார் வகுப்புகள் நடத்துவது
முற்றாகத்தடை செய்தல்
04-பொது மக்கள் கூடுகின்ற நிகழ்வுகள்
களியாட்டங்கள், இசை நிகழ்சிகளை முற்றாகத்தடை செய்தல்.
05. மக்கள் அதிக அளவு ஒன்றுகூடும் கூட்டங்கள், மாநாடுகளை தவிர்த்தல்.
06-பூங்காக்களை பொதுமக்கள்
பாவிப்பது முற்றாக தடை
செய்த ல்.
07. சமூக இடைவெளியுடனான மத வழிபாடுகளை நடாத்துதல்.
மேலும் இவ் விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தினை கௌரவ தவிசாளர் வலியுறுத்தினார். தொடர்ந்து குடாரப்புவில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் PCR பரிசோதனையில் தொற்று எவருக்கும் இல்லை என தெரியவந்துள்ளதாகவும் எனினும் விடத்தல் பளையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 09 நபர்களின் பரிசோதனை முடிவின் அடிப்படையில் இவர்களிற்கான மேலதிக பரிசோதனை செய்யப்படும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டதுடன் அன்மையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்ட பெண்ணுடன் பயணம் மேற்கொண்ட 50 க்கு மேற்பட்ட நபர்களில் இதுவரை 05 நபர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள். தம்மை வெளிப்படுத்தி சமூகத்தொற்று ஏற்படுவதனை தடுப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து வெற்றிலைக்கேணி கடற்படை பொறுப்பதிகாரி தாம் கடலில் தம்மால் முடிந்தளவு கண்காணிப்பினை மேற்கொள்வதாகவும் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள கடல் தொழிலாளர்களிற்கு இவ்விடம் தொடர்பில் கூடிய விழிப்புணர்வினை வழங்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியதுடன் இந்திய மீனவர்களுடன் தொடர்பினைக்கொணடவர்களை தாம் கைது செய்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இராணுவ அதிகாரிகள் எதிர்காலத்தில் தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அனைவரும் சிறந்த தொடர்பினைப் பேணுவதுடன் இப்பிரதேசத்தில் உள்ளவர்களிற்கான சுய தனிமைப்படுத்தல் நிலையத்தினை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியத்தினை தெரிவித்தார்கள். தொடர்ந்து தற்போதைய நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பாக அவதானமாக இருப்பதுடன் பிரதேசத்தில் தற்போதைய உணவுக் கையிருப்பினை சேகரித்தல் வேண்டும் எனவும் பிரதேச. செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.



















