வடமராட்சி கிழக்கு பிரதேச மட்ட விளையாட்டு போட்டி நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் 2026/05/22 வெள்ளிக்கிழமை பி.ப. 01.00 மணிக்கு கட்டைக்காடு சென்.மேரிஸ் வி.க. மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கைலாயபிள்ளை சிவகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாத ஆலய பங்குத்தந்தை அருட்திரு. விமலசேகரன் வசந்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட நடுவர் சங்கத் தலைவர் அருந்தவராசா யுவராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.













