Tamil-Sri LankaEnglish (United Kingdom)

எமது பிரதேச கீதம்.

There are no translations available.

வடமராட்சி கிழக்கு பிரதேச கீதம்


பல்லவி

(தனதன்ன தனன தனதன தான
தனதன தானன தானானே!)

வடமராட்சி கிழக்கு வளநிலம் என்றும்
மகத்துவம் பெற்று வாழியவே!
மிடுக்குடன் நிமிர்ந்து மேன்நிலை கண்டு
விறலில் உயர்ந்து ஓங்குகவே!

சரணங்கள்

(தான தனந்தன தான தனானா)

இந்து சமுத்திர அலைகள் தாலாட்ட
ஈடில் மணல், வயல், பனைகள் பாலூட்ட
கண்டல், கடலேரி அரணெனக் காக்க
கருணை மலிந்திடும் மடி… இது வெல்க!
(வட)

நான்கு வகை நிலம் நன்மை பயக்கும்
நாக தம்பிரான்அருளும் மணக்கும்
கூத்து கலை, இசை, கிராமிய வாழ்வும்,
குலவிட அன்பும்பண் பாடும் செழிக்கும்.
(வட)

சுண்டிக் குளச் சரணாலயம், புல்லா
வெளிதனில் யாத்திரைத் தலம், கரையெங்கும்
பொன்மணல் மாலை, சவுக்கு, மிகத் தொன்மைக்
கலங்கரைகள், எங்கள் பெருமை உரைக்கும்!
(வட)

வருந்தொடர் இடரிடை வளைந்திடா பூமி
அழிவெனும் ‘அலைகள்’ முன் மலர்ந்திடும் பூமி
தவப்பயனால் இன்றும் தளைத்திடும் பூமி
தலை நிமிர்ந்தெழும் மக்கள் குறைகளைந் தோங்கி.
(வட)


ஆக்கம் : கவிஞர்.இ.த.ஜெசீலன்

 
Division Map
Divisional Flag
Divisional Secretary
ds photo.jpg
Who's Online
අප සමඟ අමුත්තන් 15 ක් සබැදී සිටී
Divisional Secretariats